Thursday 12 September 2013

உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்.


 நண்பர்களுக்கு வணக்கம்.

வருகின்ற 14/9/13 ந்தேதி சனிக்கிழமை எனக்கு ஒரு முக்கியமான நாள்

காரணம் அன்றுதான் எனது இருபத்தைந்தாவது திருமண நாள், ஆமாம் வெள்ளி விழாவேதான்.

வழக்கமாக நான் எனது திருமண நாளை மறந்துவிடுவேன்

“என்னங்க இப்படி கிழக்கு பக்கமாக வந்து நில்லுங்க”, என்று சொல்லிவிட்டு ‘தொபுக்கடீர்’ என வருடத்தில் ஒருநாள் என் திருமதி கலைச்செல்வி என் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்றால் அன்றுதான் என் திருமண நாள் என்பது நினைவிர்க்குவரும்.எழுந்த வேகத்திலேயே உங்களுக்கு எதுதான் நினைவிற்கு வந்தது ‘இது’ நினைவிற்கு வர என்று அன்றைய திருமண ‘வாழ்த்தையும்’ பதிவு செய்வார்.

அதே போல மதுரை பத்திரிகையாளரும்,நண்பரும்,கவிஞருமான திரு.திருமலை  அன்று மதியம் கிடைப்பது போல  கூரியரில்  திருமண நாள் வாழ்த்தை அனுப்பி ‘ஆறுதல்’ சொல்வார்.

உண்மையில் என்னை வாழ்த்துவதை விட என் திருமதியை இந்த தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

எப்போது சிரிப்பான்,எப்போது சீரியசாக இருப்பான்,எப்போது வேலைக்கு போவான்,எப்போது திரும்பி வருவான் என்று எதுவுமே தெரியாத, எப்போதும் புத்தகத்தையே (தற்போது கூடுதாலக கம்ப்யூட்டரையும்) கட்டிக்கொண்டு அழும் கணவனாகப்பட்ட என்னோடு கடந்த இருபத்தைந்து வருடங்களாக மல்லுக்கட்டிக்கொண்டு குடும்பம் நடத்தும் உத்தம புத்திரி அவர்.

..என் தேவையை யாரறிவார் உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்.
என்ற வியட்நாம் வீடு படப்பாடல் வரிகள்
என் துணைவியாருக்காகவே பாடப்பட்டது போன்ற வரிகளாகும்.

...என்னை, எனக்கே பிடிக்காத போது
உனக்கு மட்டும் நான் பிடித்து போனதெப்படி

எல்லோரும் என் முகம் பார்த்தபோது
நீ மட்டும் அகம் பார்த்தாயோ...

என்று நான் எழுதிக்கொடுத்ததை நல்ல
கவிதை என்ற நடமாடும் கவிதையவள்.

அவளை அல்ல அவரை இந்த வெள்ளி விழா திருமண நாளிலாவது பெரிய ஒட்டலுக்கு அழைத்துப்போய் ‘மெனு’ வாங்கி அதில் ‘விலைப்பட்டியல் பார்க்காமல்’நல்ல உணவு ஆர்டர்  செய்து வாங்கித்தர வேண்டும்.

வாழ்த்துங்கள் நன்றி!

அன்புடன்
எல்.முருகராஜ்

2 comments:

  1. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க . நாங்க இப்போதான் பத்தாவது வருடம் எழு மலை எழு கடலை தாண்டி வந்தது போல இருக்கிறது, இல்லறவாழ்வி எவ்வளவோ அனுபவம் வாய்த்தவர்கள் நீங்கள் உங்களது ஆசிர்வாதமும் வழி நடத்தலும் எங்களோடு இருந்தால் பக்க பலமாக இருக்கும்.

    ReplyDelete
  2. சார் நா ரொம்ப சின்ன பையன்....உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியல. இருந்தாலும் வாழ்த்துகள் சார்

    ReplyDelete