Friday 29 November 2013

கதை கேளு,கதை கேளு கண்ணனின் சிறு தானிய தயாரிப்பு கதை கேளு...


-எல்.முருகராஜ்.




மதுரையில் பலசரக்கு விற்பனைக்கு பேர்போன கிழமாசிவீதியை ஒட்டியுள்ள வெங்கலக்கடை தெரு வழியாக போகும் போது ஒரு கடை வாசலில் இருந்த வித்தியாசமான போர்டு கண்களை ஈர்த்தது.

இன்றைய துரத்தலான வாழ்க்கையில் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் நாம் இந்த வேகமான ஓட்டத்தில் தொலைத்தவை மொட்டை மாடிக்காற்று, சைக்கிள் பயணம், முற்றத்து கோலம், தோட்டத்து பூக்கள், கிணற்றுக்குளியல், எதிர்பார்ப்பு இல்லாத நட்பு, திருவிழாக்களிப்பு

 இவை எல்லாவற்றையும் விட தற்போது அதிகமாக இழந்த, இழந்து கொண்டு இருக்கும் மாபெரும் விஷயம் நம் நல்வாழ்வும்,ஆரோக்கியமும்தான்...

அந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க குறைந்த விலையில் தரமான முறையில் இங்கு சிறு தானியங்கள் கிடைக்கும் என்று எழுதிப் போடப்பட்டு இருந்ததை பார்த்ததும் கால்கள் பிரேக் பிடித்தன. விசாரிக்க ஆரம்பித்தேன்.

கண்ணன்

நூறு ரூபாய்கு வீடு வாடகைக்கு கிடைக்குமா என விசாரித்து அதன்படியே விளாச்சேசரியில் கிடைத்த வீட்டில் வாழ்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர்.

தன் குடும்ப சுமைகளை களைய கடுமையாக உழைத்து, கவனமாக படித்து கம்ப்யூட்டர் சிஸ்டம் என்ஜீனியரானார்,படித்த படிப்பில் நல்லபடியாக சம்பாதிக்க சசலனமற்ற ஆறு போல செசன்றுகொண்டிருந்த குடும்பத்தில் நண்பர் உருவில் பிரச்னை வந்தது.

ரெடிமேட் சேசமியா தயாரிக்க பெரிய ஆர்டர் கிடைத்துள்ளது, ஒரு பத்துலட்சசம் ரூபாய் மதிப்பில் சேமியா மெஷின் வாங்கினால் நிறைய சசம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கு இரண்டு மாதத்தில் பணம் திருப்பித்தரப்படும் உதவ முடியுமா? என்று கெஞ்சி கேட்ட நண்பருக்கு உதவுவதற்காக அதுவரை சேசமித்து வைத்திருந்த அத்தணை பணத்தையும் திரட்டி கொடுத்து மெஷின் வாங்க உதவினார்.

இரண்டே மாதம்தான், எனக்கு இது ஒத்துவரவில்லை என்று செசால்லிவிட்டு நண்பர் கையை உதறிவிட்டு செசல்ல சேசமியா தயாரிக்கும் மெஷினும், கண்ணனும் மட்டும் தனியாக நின்றனர்.என்ன செய்வதென்ற தெரியாத நிலை.

அப்போதுதான் இயற்கை விவசசாயி நம்மாழ்வாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அதைத்தொடர்ந்து சாமை,குதிரைவாலி,கொள்ளு,தினை,கேழ்வரகு,கம்பு,சேசாளம் என்ற சிறு தானியங்கள் மீது இவரது கவனம் செசன்றது.ஒவ்வொரு தானியமும் நடப்பில் உள்ள அரிசியைவிட பலமடங்கு உயர்ந்தது ஆனால் விலை குறைந்தது என்பதை முதலில் உணர்ந்தார்.

இதுவரை புழக்கத்தில் உள்ள அனைத்து சேசமியாக்களும் மைதாவால் தயாரிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் சிறு தானியங்களை கொண்டு சேமியா தயாரிக்கக்கூடாது என்று முடிவு செசய்து களத்தில் இறங்கினார்.கம்ப்யூட்டர் துறைக்கு குட்பை செசான்னார்.

இந்த நேரம் இவரது தாயார் சசர்க்கரை நோயால் இறந்து போனார், அப்போது இவருக்கு சத்தான நமது பராம்பரிய உணவு கொடுத்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் இருந்திருப்பார் என்று மருத்துவர்கள் செசால்ல தன் தயாரைப் போல சத்தான சசரியான உணவு இல்லாமல் யாரும் இறந்துவிடக்கூடாது குறிப்பாக சசர்க்கரை நோயாளிகள் என்று முடிவிற்கு வந்தார்.

சிறு தானியங்கள் குறித்து நிறைய படித்தார்,நிறைய ஆராய்ச்சி செசய்தார்,முறைப்படி அனுமதி பெற்றார்,கூத்தியார்குண்டில் தயாரிப்பு கூடத்தை நிறுவினார்.

சிறு தானியங்களை உற்பத்தி செசய்யும் இடங்களுக்கே தேடிப்போய் வாங்கிவந்து சுத்தம் செசய்து சுகாதாரமான முறையில் செயற்கை வண்ணம் சேசர்க்காமல் ராசாயண மாற்றம் செசய்யாமல் சிறு தானியங்களான கொள்ளு,கேப்பை,வரகு,தினை,குதிரைவாலி,சசாமை போன்ற தானியங்களைக் கொண்டு வெற்றிகரமாக சேமியாவை உருவாக்கினார்.

இதனை தேவையான காய்கறிகளுடன் சேவையாக சசமைத்து நம்மாழ்வார் நடத்திய இயற்கை விவசசாயம் குறித்த முகாமிற்கு வந்தவர்களுக்கு பரிமாறினார்.சாப்பிட்டவர்கள் சந்தோஷப்பட்டனர்.குறிப்பாக நம்மாழ்வார் நிறையவே பாராட்டினார்.சமூகத்திற்கான அவசிய தேவை என்றும் குறிப்பிட்டார்.

சரி இதனை மக்களிடம் கொண்டு போய் சேசர்க்கவேண்டும் என்பதற்காக தற்போது மேலே செசான்ன இடத்தில் தனது தயாரிப்புகளை "மாஸ்டர் பிராண்ட்' என்ற பெயரில்  காலை முதல் இரவு வரை அதிக லாப நோக்கமின்றி விற்பனை செசய்து கொண்டு இருக்கிறார்.முப்பது ரூபாய் கொள்ளு சேசமியா பாக்கெட்டை வாங்கினால் அதனை நான்கு பேர் நன்றாக சசாப்பிடலாம்.ஆரோக்கியமாக வாழலாம்.இது போல வரகு,சாமை,குதிரைவாலி என்று எண்ணற்ற சிறு தானியங்கள் பாக்கெட் பாக்கெட்டாக உள்ளன.

கடையில் ஒரு சார்ட்டையும் தொங்கவிட்டுள்ளார்,அரிசி உணவைவிட சிறு தானியங்கள் எந்த அளவில் சிறந்தது,சத்து மிகுந்தது,உடலுக்கு உற்சசாகம் தருவது என்பதை அந்த "சார்ட்' விளக்குகிறது.ஒவ்வொன்றிலும் எந்த அளவிற்கு நார்ச்சசத்து,புரோட்டீன் போன்றவை இருக்கிறது என்பதையும் மேற்கண்ட் "சார்ட்' விளக்குகிறது.

பெரிதாக விளம்பரம் கிடையாது வாங்கிப்போனவர்கள் , சாப்பிட்டு பலன் பெற்றவர்கள் வாய்வழியாக செசால்லி செசால்லி அதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வந்து வாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

இது நோயாளிகளுக்கு மட்டுமான உணவு அல்ல வாழ்க்கையில் எப்போதுமே எந்த நோயும் வராமல் தடுக்ககூடிய உணவு பொருள்.குழந்தை பருவத்தில் இருந்தே கொடுத்து பழக்க வேண்டிய உன்னத பொருள்.ஒரு காலத்தில் இதுதான் நமக்கு பிரதான உணவு ஆனால் இப்போது தேடிப்பிடித்து வாங்க வேண்டிய உணவு.

வாழும் வாழ்க்கை சசமூகத்திற்கு பயன்படும்படியாக இருக்கவேண்டும் என்பது என் கொள்கை அந்த கொள்கைக்கும் அர்த்தம் உண்டாக்கும்படியாக இந்த உணவு பொருளை தரமாக கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.இப்போது தேனும் தினைமாவும் கலந்து பிஸ்கட் தயாரித்துள்ளேன் அதுவும் நன்றாக போகிறது,அடுத்ததாக முருங்கை கீரையை பயன்படுத்தி என்ன செசய்யலாம் என்றும் எனது ஆராய்ச்சி செசல்கிறது.

பீட்சசா,பர்கர்,எப்போதோ செசத்த கோழியின் பொறித்த உணவுகள் போன்றவை உரக்க சசத்தமிடும் தற்போதைய வணிக சசந்தை இரைச்சசலில் ஒரமாக ஒடுங்கி ஒளிந்திருக்கும் நம் பராம்பரிய உணவை மீட்டெடுத்து அதை மக்கள் பயன்பெறும்படியாக மாற்றினால் பின்னாளில் வரக்கூடிய பலவித நோயின் பிடிகளிலில் இருந்து நம் சசமுதாயம் நிச்சசயம் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது,லட்சசங்கள் பெரிதல்ல லட்சியமே பெரிது என எண்ணுவோர் யார் வேண்டுமானாலும் எனது இந்த பணியில் என்னோடு கைகோர்க்கலாம் என்று கூறிய கண்ணனின் எண்:9788854854.




Monday 25 November 2013

இதுவா வெற்றி? 
-எல்.முருகராஜ்


மிக அபூர்வமாய், நம் ஊர், 'டிவி'யில் நல்ல நிகழ்ச்சிகள் வருவது உண்டு. அவற்றில் ஒன்று இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் அமீர் கான் தொகுத்து வழங்கிய, 'சத்யமேவ ஜெயதே' என்ற அரட்டை நிகழ்ச்சி. பெண் கருக்கொலை, பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுவர், சிறுமியர், மருத்துவ முறைகேடு என்று, சமூகத்தில் நிலவும் அவலங்களை அலசி ஆராய்ந்து, அவற்றை தொகுத்தளிப்பார்.

'சில பிரச்னைகளை எடுத்து பேசும் போது, 'இதையெல்லாமா பிரச்னையாக பேசுவது?' என்று கேட்கின்றனர். ஏன், இதையெல்லாம் பேசக்கூடாதா?' என்று சொல்லிவிட்டுதான், நிகழ்ச்சியையே அவர் ஆரம்பிப்பார்.அது போலத் தான், இங்கே ஒரு விஷயம் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது அது 'மங்கள்யான் ராக்கெட்' பிரச்னை.'அது தான் பிரமாதமாப் பறந்துவிட்டதே, அப்புறம் என்ன, அதைப்பத்தி பேசறதுக்கு இருக்கு? அது நாட்டோட பெருமை, விஞ்ஞானிகளின் பிரமிக்கத்தக்க வெற்றி' என்றெல்லாம், நீங்கள் சொல்வதில், எந்தவித மாற்று கருத்தும் சொல்லப்போவது இல்லை.ஆனால், காலம் காலமாய் ராக்கெட்டை மேலேயும், கடலுக்கு உள்ளேயும் விட்டதால் கிடைத்த பலன் என்ன? தொலைத்த பணம் எவ்வளவு?இது போல ராக்கெட் பறக்கவிடும் போது, நாட்டின் ஏழ்மையையே, மொத்தமாக மூட்டை கட்டி, மேலே அனுப்பியது போல, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ஆனந்தப்படுவதும், பிரதமர் துவங்கி ஜனாதிபதி வரை, வாழ்த்து வழங்குவதும், பின் கல்லுாரி, பல்கலைக்கழகங்களில், இந்த ராக்கெட் புராணம் பாடியபடி வலம்வருவதும், கூப்பிடும் பல்கலைக்கழகங்களின் சக்திக்கேற்ற, டாக்டர் பட்டம் பெற்றுக்கொள்வதும், அனைத்து, 'டிவி'களிலும் யாரும் பார்க்காத, அதிகாலை சிறப்பு விருந்தினர் பகுதியில், இடம் பெற்று பேசுவதும் தான் நடக்கும்.இது அடுத்த செயற்கைக்கோள் பறக்கும் வரை தொடரும். அடுத்த செயற்கைக்கோள் பறக்கவிடப்பட்டதும், இதே பல்லவிகள், மீண்டும் ஆரம்பிக்கும். இந்த முறை, திட்ட இயக்குனர் மாறியிருக்கலாம் அல்லது இஸ்ரோ தலைவரே ஓய்வுபெற்றிருக்கலாம்.

ஒரு செயற்கைக்கோள் பறக்கவிட்டதால், மக்களுக்கு கிடைத்த, கிடைக்கும் கண்கண்ட பலன் என்ன என்பது தான், இப்போதைய கேள்வி.கடந்த 1969ம் ஆண்டு, ஜூலை, 20ம் தேதி (கிட்டத்தட்ட 43 ஆண்டு) அமெரிக்கா விட்ட ராக்கெட்டில் போய், சந்திரனில் கால்வைத்த ஆம்ஸ்ட்ராங் கொண்டுவந்த கல்லைதான், இன்னமும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். இதைத்தாண்டி என்ன நடந்தது என்பதை, எந்த பாமரனும் அறிந்திலன்.இந்த, 'மங்கள்யான்' பறப்பதற்கு மட்டும், 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது. இதுவரை பறந்த, பறக்க முடியாமல் போன, ராக்கெட்டுகளுக்கான செலவை எண்ணிப் பார்க்கும் போது எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே, தெரியாத அளவிற்கு கண் கட்டுகிறது.'மங்கள்யான்' செயற்கைக்கோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., எக்ஸ்.எல்.,சி25 ராக்கெட் 250 கி.மீ., பயணித்து, புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, பின், 23,500 கி.மீ., பயணித்து, நீள்வட்ட பாதையிலும், பின், 10 மாதகாலம், 30 கோடி கி.மீ., பயணித்து, செவ்வாய்கிரக சுற்றுப்பாதையையும் அடையுமாம்.அதன்பின், 'அங்கு தண்ணீர், கனிம வளம், பருவநிலை பற்றி ஆராய்ந்து, அப்படியே அங்கே மனிதர்கள் வாழும் சூழல் உள்ளதா?' என்றும் கண்டுபிடிக்குமாம். கண்டுபிடித்து பூமியில் இருந்து, 30 கோடி கி.மீ., தூரத்தில் உள்ள செவ்வாயில் கொண்டு போய், ஆட்களை குடியமர்த்த போகிறார்களா... தெரியவில்லை.குடும்பத்தை காப்பாற்ற, ஆண்டு முழுவதும் மழையிலும், வெயிலிலும் கிடந்து வாடி, தீபாவளி போன்ற நல்ல நாளில் கூட, ஆண்டிற்கு ஒரு முறை, தன் சொந்தங்களை பார்க்க, ரத்த சம்பந்தங்களை சந்திக்க, சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்து போகமுடியவில்லை. பதினாறு மணி நேரம் என்றாலும், 'அனைத்தையும்' அடக்கி, முன்பதிவு இல்லாத பெட்டியில், பாத்ரூம் வாடையை சகித்து, படிக்கட்டு கதவுகளில் தொங்கி, பயணம் செய்தாக வேண்டிய அவலம். கூடுதலாக ரயில் விடவேண்டாம்; கூடுதலாக பெட்டியை கூட சேர்க்கமுடியாத அளவிற்கு, ரயில்வேக்கு பட்ஜெட் பிரச்னை.

உயிர்காக்கும் மாத்திரை, மருந்துகளை வெளியே வாங்க, வசதியில்லாத ஏழை நோயாளிகள். அரசு மருத்துவமனையின் நீளமான வரிசையில், மணிக்கணக்கில் காத்திருந்து நகர்ந்தபடியும், ஊர்ந்தபடியும் மாத்திரை கவுன்டரை அடையும் போது, 'இந்த வாரமும், மாத்திரை வரலை போய்ட்டு, அடுத்த வாரம் வா பார்ப்போம்' என்று, விரட்டியடிக்காத குறையாக விரட்டும் நிதி நிலையில், அரசு மருத்துவமனைகள்.இன்றைக்கும், மலைவாழ் மக்களை பிரசவ நேரத்தில், மூங்கில் குச்சியில் தொட்டில் கட்டி தூக்கிய படி ஓடி வருகின்றனர்.அவர்கள் பள்ளத்தில் விழுந்து, எழுந்து அடிவாரத்திற்கு ஓடி வருவதற்குள், இரண்டு உயிர்களுக்கும் உத்தரவாதமில்லை. இவர்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையத்தை, மலையில் அமைக்காவிட்டாலும் பரவாயில்லை; அவர்களை, பத்திரமாக கீழே கொண்டுவர, ஒரு லகுவான ஸ்ட்ரெச்சர் கூட இன்னும் வாங்கமுடியவில்லை; காரணம் துட்டு இல்லை.கடைசி காலத்திலாவது பசி, பட்டினி இல்லாமல், கவுரவமாய் வாழ, முதியோர் உதவித்தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகங்களில், பஞ்சடைத்த கண்களுடனும், பரிதாபமான உடைகளுடனும், பஸ்சுக்கு கூட காசு இல்லாமல், ஆண்டுக்கணக்கில், கம்பை ஊன்றியே, நடந்தபடி வந்து போகும் முதியோர்கள், 'அப்புறம் பார்க்கலாம்' என்று, ஒற்றைவரியில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். காரணம் நிதி இல்லை.

ஊரில் உள்ள ஆயிரத்தெட்டு அரசு அலுவலகங்களின், படிக்கட்டுகளில் ஏறமுடியாமல், அல்லல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு சாய்வு தளம் அமைப்பதற்கு கூட காசு இல்லை; மேலிடத்திற்கு எழுதி அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். என்றாவது ஒரு நாள், பட்ஜெட்டில் சாய்வுதளம் கட்ட, பணம் ஒதுக்குவர் என்ற நம்பிக்கையுடன், காரணம் அதற்கும் பட்ஜெட் இல்லை.கோவைக்குள், ஒரு பாலம் இருக்கிறது. அதை சீரமைத்தோம் என்று சொல்லி, அந்த பாலம் வழியாக பயணம் செய்யும் வாகனங்களிடம், 'பத்தை கொடு, இருபதை கொடு' என, கடந்த கால் நுாற்றாண்டாக வசூல் செய்தபடி இருக்கின்றனர், அப்படியும், அந்த சிறிய பாலத்தை சீரமைத்த செலவை, எடுக்க முடியவில்லையாம். இன்னும், ஒரு அரை நுாற்றாண்டுக்கு, அங்கே வழிப்பறி போல, வசூல் செய்து கொண்டுதான் இருக்கப்போகின்றனர். பொதுமக்களை வாட்டி எடுத்துக்கொண்டுதான் இருக்கப்போகின்றனர். 'வாங்கினது வரை போதும், இனி பாலத்தில் இலவசமாக போய்க் கொள்ளுங்கள்' என்று சொல்ல, இன்னும் வாய்வரவில்லை; காரணம் பட்ஜெட் இல்லை.இதையெல்லாம் முடித்துவிட்டு பின், 450 கோடி செலவில், ராக்கெட் விட்டாலும், 4,500 கோடி ரூபாய் செலவில், ராக்கெட் விட்டாலும் யார் கேட்கப்போகின்றனர்.

'இதையும், அதையும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?' இது நாட்டின் கவுரவம், விண்வெளியில் நமக்கு கிடைத்த வெற்றி. மூக்கு உள்ளமட்டிலும், சளி என்பது போல நமக்கு ஏழைகள், அவர்களை திருப்தி செய்யமுடியாது; என்றே பலரும் சொல்வர்.அவர்களுக்கு, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தந்த பதிலைத்தான் தரவேண்டியிருக்கிறது. 'டெலிமெடிசின், டெலி எஜுகேசன், கிராம வள ஆதார மையங்களை மையப்படுத்தும், திட்டங்களை நிறுத்திவிட்டு, 2007ல் போட்ட திட்டத்தை, இப்போது செயல்படுத்துவதில் என்ன பிரயோஜனம்?செயற்கைக்கோளின், பிரதான உபயோகமான டிரான்ஸ்பாண்டர்களில், கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது அதை சரி செய்யும் திட்டமேதும் இல்லை. எனவே, செவ்வாய் கிரகத்திட்டம் என்னைப்பொறுத்தவரை, தவறான முன்னுரிமை கொடுத்து, செயல்படுத்தப்பட்டு உள்ளது' இவ்வாறு, அவர் சொல்லி உள்ளார்.இவருக்கு செவ்வாய் செயற்கைக்கோள் ஆர்வலர்கள், என்ன பதில் தரப்போகின்றனர். நாட்டின் கவுரவம் என்பது, ராக்கெட் விடுவதில் இல்லை. நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரங்களை பெருக்கி, அவர்களை மகிழ்ச்சியும், திருப்தியும்படுத்துவதில்தான் இருக்கிறது.இவர்கள் மாட மாளிகைகள், பளிங்கு ரோடுகள் கேட்கவில்லை. படித்த படிப்பிற்காக இல்லாவிட்டாலும், கவுரவமாய் சாப்பிடுவதற்காக, ஒரு சம்பாத்தியம், ஆரோக்கிய குறைவு ஏற்படும் போது, மொத்த சொத்தையும் எழுதிக்கேட்காத, தரமான மருத்துவம், சுகாதாரமான சுற்றுப்புற சூழல், பயமுறுத்தாத, பாதுகாப்பான போக்குவரத்து. எளிமையான, இனிமையான வாழ்க்கை இல்லாதவருக்கும், இயலாதவருக்கும் முன்னுரிமை. இதெல்லாம் செய்துகொடுத்துவிட்டு, எத்தனை ராக்கெட் விட்டாலும், யார் கேட்கப்போகின்றனர்.
இமெயில்: murugaraj2006@gmail.com

ஐநாவும் என்னை அழைக்கும்...

- எல்.முருகராஜ்



அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா...

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.

சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை

இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.

ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.

ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்'ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்' என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999. (சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரது தாயார் லட்சுமிதேவி பேசுவார்)


Tuesday 19 November 2013

வழிகாட்டுகிறது வாராப்பூர்...


- எல்.முருகராஜ்




சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது அழகிய வாராப்பூர் கிராமம்.

இந்த கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் உள்ளன இதில் இருநூறு குடும்பங்கள் முஸ்லீம் குடும்பங்களாகும்.

இந்த கிராமத்தில் மொகரம் பண்டிகையை முஸ்லீம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் இணைந்து நடத்துகின்றனர்.

இதற்கான காரணத்திற்கு இருநூறு வருடத்திற்கு முன் செல்லவேண்டும்.

அப்போது கிராமத்தில் மூன்று முஸ்லீம் குடும்பங்கள்தான் இருந்தன

அந்த குடும்பங்களால் தங்களது வாழ்வாதாரத்தையும் பார்த்துக்கொண்டு பண்டிகையையும் கொண்டாடமுடியாமல் தவித்த போது நாங்கள் இருக்கிறோம் வாருங்கள் சேர்ந்து கொண்டாடுவோம் என்று தோள்கொடுத்தனர் அங்கு இருந்து இந்துக்கள். நீங்கள் பண்டிகை கொண்டாடுவதை பார்த்துக்கொள்ளுங்கள், பண்டிகைக்கு தேவையான செலவுகள், உதவிகள், ஒருங்கிணைப்புகள் என்று அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி அந்த வருட மொகரம் பண்டிகையை ஊர் திருவிழாவாக கொண்டாடினர்.

அன்று தொட்டு இன்றுவரை அந்த அன்பும், பண்பும், பாசமும், உறவும் தொடர்கிறது.

இப்போது இருநூறுக்கும் அதிகமான முஸ்லீம் குடும்பங்கள் இருந்தாலும் அப்போது போலவே தங்களது பண்டிகையில் இந்துக்களின் பங்கு இப்போதும் இருக்கவேண்டும் என்று அனைவரும் விரும்புவதால் அன்று போலவே இன்றும் மொகரம் பண்டிகையை தங்களது உறவினர் போன்ற முஸ்லீம்களுக்காக எடுத்து நடத்துகின்றனர்.

மொகரம் பண்டிகைக்கு முதல் நாள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். பூக்குழிக்கு இறங்க தேவையான மூன்றடி பள்ளம் வெட்டுதல், அதில் விறகுகள் இட்டு அக்னி குண்டம் வளர்த்தல், அதற்கான விறகுகளை நன்கொடையாக வழங்குதல், மற்றும் பூக்குண்டத்தை சுற்றி அலங்கரித்தல் என்று பூக்குழியை தயார் செய்வது முழுவதும் இந்துக்களே.

தீன், தீன் என்று சொல்லியபடி முஸ்லீம்கள் பூக்குழி இறங்கும் போது கூடியிருந்து அவர்களை வாழ்த்துவதும் இந்துக்களே. பூ மிதித்தல் பண்டிகையை அங்கு பூ மொழுகல் என்றும் அழைக்கின்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வழங்குவதற்காக பானகிரகம் எனப்படும் பழச்சசாறு போன்ற நீரை மண்பானையில் வைத்து ஊர்வலமாக கொண்டுவந்து வழங்குவதையும் அங்குள்ள இந்துக்கள் வழக்கமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர்.

இந்த விழாவிற்காக பத்து நாட்களுக்கு முன்பிருந்தே நோன்பு துவங்கிவிடும், மொகரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியிலும் இந்துக்களின் பங்கு அதிகம்.

வாராப்பூர் கிராமத்தை பொறுத்தவரை இந்த மொகரம் பண்டிகையை தங்களது கிராம விழாவாக நடத்துவதால் சமூக நல்லிணக்கவிழாவாகவும் நடைபெறுகிறது. இந்த கிராமத்தில் பிறந்தவர்கள் எங்கிருந்தாலும் இந்த விழா சமயத்தில் தவறாது வந்துவிடுவார்கள் அப்படி வருபவர்களில் ஒருவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனரும், அகில இந்திய மூவேந்தர் முன்வேற்ற கழக தலைவருமான டாக்டர் சேதுராமன் ஆவார். இந்த மொகரம் பண்டிகையில் பங்கேற்பதுடன் இந்த பண்டிகை சிறக்க தனது சிறப்பான "பங்களிப்பையும்' வருடந்தவறாமல் தந்து வருகிறார்.

Monday 18 November 2013


போட்டூன்



தலைப்பு:
உன் முகம் தெரிவது எப்போது?

படவிளக்கம்:

இன்னும் கொஞ்ச நாளைக்கு சச்சின்,அப்புறம் டோனி அதுக்கப்புறம் வீராத் ஹோலிக்கு என்று உன் பின் மண்டையை செதுக்கி குத்தகைக்கு விட்டு அவர்களுக்கு புகழ் வெளிச்சம் தேடிக்கொடுத்து கொண்டு இருக்கும் இந்திய இளைஞனே நீ உன் முகம் காட்டி புகழ் பெறுவது எப்போது,உன்னை நம்பித்தான் 2020-ல் வல்லரசாவோம் என்று சொன்னார் ஒருவர்,சொன்னவர் உன்னை இந்த நிலையில் பார்த்தாரோ என்னவோ இப்போது  ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்.

நன்றி:தினமலர்.காம்

Wednesday 13 November 2013

இது பேச்சியம்மாளின் கதை...

- எல்.முருகராஜ்


சதுரகிரி

மதுரை- ஸ்ரீவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது வத்திராயிருப்பு, வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பது தாணிப்பாறை.

இதுவே சதுரகிரி மலையின் அடிவாரம்.

சதுரகிரி பிரமிப்பு, மகிழ்ச்சி, இன்பம், பக்தி, சித்தி முதலியனவற்றை உண்டாக்கக்கூடிய பிரமாண்டம்.
இயற்கை வளங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை. இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மிக சிறப்பும், பதினெட்டு சித்தர்களும், பற்பல ஞானிகளும், ரிஷிகளும் உருவமாய் வாழ்ந்த சிறப்பும், அருவமாய் உலவும் பெருமையும் கொண்டிருக்கிறது
.
கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் சுமார் 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. மலை ஏறினால் மலைமேலிருக்கும் மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்குச் செல்லலாம். சற்று கடுமையான மலையேற்றம்தான். சீரற்ற படிகள், சறுக்கும் பாறைகள், ஒத்தையடிப் பாதைகள், கரடு முரடான ஏற்ற இறக்கங்கள், செங்குத்தான வழுக்குப் பாறைகள்; கரடியும் குரங்கும், பாம்பும் தொந்தரவு தருமோ எனப் பயப்படுத்தும் காடுகள்; நீரோடும் வழித்தடங்களை தாண்டியபடி ஒருவித சாகஸத்துடன் கடக்க வேண்டியிருக்கும்.

இங்கு அமாவசை, பவுர்ணமி தினங்களிலும் ஆடி அமாவசை தினங்களிலும் திரளும் கூட்டம் இப்போது சாதாரண நாட்களிலும் வருகிறது.

நீண்ட நாட்களாகவே சதுரகிரி பயணம் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். அது கடந்த வாரம் எதிர்பாராமல் வாய்த்தது. மனதுவைத்து அழைத்த சுந்தர மகாலிங்கத்திற்கு நன்றி சொல்லி விட்டு மேலேறினேன்.
மலை மீது உணவு இலவசமாக கிடைக்கும் ஆனால் வழியில் மினரல் வாட்டர் குடித்து பழகியவர்களுக்கு அந்த தண்ணீர் கிடைக்காது ஆகவே கையோடு எடுத்துச் செல்லுங்கள் என்ற அறிவுரையின்படி தண்ணீர் பாட்டிலுடன் மலையேறினேன். மலை ஏற, ஏற போட்டிருக்கும் சட்டையும் கையில் கொண்டு போன தண்ணீர் பாட்டிலும் கூட பெரும் சுமையாக இருந்தது.

அப்போதுதான் கவனித்தேன் சுமார் 30 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டரை தூக்கிக் கொண்டு அநாயசமாக ஒரு பெண் மலையேறிக் கொண்டு இருந்தார், படம் எடுக்கும் போது சிரித்தார்.

பேச்சியம்மாள் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணின் சிரிப்பிற்கு பின் வேதனையான கதை இருந்தது.

டாஸ்மாக்கிற்கு பலியான குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

ஒரு காலத்தில் உழைத்து தன்னையும், பிள்ளைகளையும் கவுரமாய் காப்பாற்றிவந்த கணவர் போதைக்கு அடிமையாகி, இப்போது டாஸ்மாக்கே கதி என்றாகிப் போனபின் பாதியில் நிற்கும் பிள்ளைகளின் படிப்பையும், பசியால் துடிக்கும் வயிற்றையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் பேச்சியம்மாளின் "தலை'யில் விழுந்தது.

மகாலிங்கம் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பலர் மேலே போய் அன்னதானம் செய்வார்கள், அதற்கான சமையல் சாதனங்கள் அரிசி காய்கறிகள் மற்றும் பக்தர்களின் உடமைகள் என்று சுமார் 30 கிலோ எடை கொண்டதாக பிரித்துக்கொண்டு மலையேறிப்போய் இறக்கி வைக்க வேண்டும். இதற்கு கூலியாக இருநூறு ரூபாய் வாங்கிக்கொள்கின்றனர்.

இதை செய்யும் பெண் சுமைகூலிகளில் ஒருவராக பேச்சியம்மாள் இருக்கிறார், இவரைப்போல சுமார் ஐம்பது பெண்கள் சுமைக்கூலிகளாக பக்தர்களின் சுமைகளை எதிர்பார்த்து அன்றாடம் அடிவாரமான தாணிப்பாறையில் காத்திருக்கின்றனர்.

நான்கு மணி நேரம் சுமையுடன் ஏறி இறக்கி வைத்து விட்டு திரும்பவேண்டும், வழியெங்கும் பரவி கிடக்கும் கரடு முரடான கற்களையும், முற்களையும் பார்த்து நடக்கவேண்டும், அப்படியே நடந்த போதும் கற்களில் பட்டு கால்களில் கொட்டும் ரத்தத்தை மண் போட்டு துடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும், தாமதமானால் கூலி கொடுப்பதில் பிரச்னை செய்வார்கள், கொஞ்சம் கால் பிசகினாலே அதலபாதாளத்தில் விழவேண்டிய அபாயம். உண்டு, மழைக் காலங்களில் இந்த ஆபத்து இரண்டு மடங்காகும். இவ்வளவு சிரமமும் ஆபத்தும் இருந்தாலும் இந்த தொழிலை இந்த சுமையை சுமந்தாக வேண்டிய கட்டாயம். காரணம் குடும்பத்தின் வறுமையை சுமைப்பதைவிட இந்த தலைச் சுமையை ஒன்றும் சிரமமில்லை என்பது இவர்களது நியாயம்.

டாஸ்மாக் அரக்கனின் அசுரத்தனமான வளர்ச்சியால் இப்போது இந்த சுமைதூக்கும் தொழிலுக்கு வரும் பெண்கள் அதிகரித்து வருவதால் இந்த தொழிலுக்கும் போட்டி உண்டு. போட்டிகளைத் தாண்டி ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு சுமை கிடைத்தாலே பெரிய விஷயம். பல நாட்கள் சுமை கிடைக்காமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பிள்ளைகள் பசிக்காக கடன் வாங்கிக் கொண்டு திரும்பும் "பேச்சியம்மாக்களும்' உண்டு.

சதுரகிரி மலைப்பகுதியில் கடுமையான மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது என்றொரு செய்தியை பார்த்தபோது முன்பெல்லாம் சலனப்படாத மனதில் இப்போது வலி உண்டாகிறது.

எத்தனை "பேச்சியம்மாக்கள்' சுமை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து திரும்பினரோ...

Friday 8 November 2013

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,தெய்வம் என்பது ராமகிருஷ்ணனாகலாம்...

- எல்.முருகராஜ்


மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அன்பும், சமுதாயத்தின் அரவணைப்பும், அரசாங்கத்தின் வேலை வாய்ப்பும்தான் என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே அமைதி குடிகொண்டுள்ள ஆய்க்குடி கிராமத்தில் அமைந்துள்ள அமர் சேவா சங்கத்தின் தலைவர்ஆய்க்குடி ராமகிருஷ்ணன்.

இவர் நான்காம் வருட பொறியாளர் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது கடற்படை அதிகாரிக்கான வேலையில் ஈர்ப்பு ஏற்பட்டு அங்கு சென்றார். படிப்படியாக அனைத்து தேர்வுகளையும் முடித்தவர் கடைசியாக உடற்தகுதி தேர்வின்போது ஏற்பட்ட விபத்தில் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மற்றும் புனேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

கழுத்திற்கு கீழ் செயல்படாத உறுப்புகளை வைத்துக்கொண்டு இனி எதற்கு இந்த வாழ்வு என்று தன் கனவுகள் நொறுங்கிப்போன நிலையில் இருந்தவரை இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அமர்ஜித் என்பவர்தான் இறைவன் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு உனக்கு இந்த நிலை ஏற்பட்டது கூட ஏதோ ஒரு சாதனை புரிவதற்குதான் என்று நம்பிக்கை விதைகளை மனதில் விதைத்தார்.

அந்த நம்பிக்கையுடன் தன் சொந்த ஊரான ஆய்க்குடிக்கு திரும்பினாலும் ஆரம்பத்தில் எதுவும் பிடிபடவில்லை. இவரை பராமரிக்கவும் பார்த்துக்கொள்ளவும் பலரது உதவி தேவைப்பட்டது. ஒரு நாளைக்கு ஏழுமுறை குளித்தால்தான் உடல் உஷ்ணம் குறையும் என்ற நிலையில் என் தந்தையார் ரோட்டில் போய் நின்று கொண்டு போவோர் வருவோரை எல்லாம் துணைக்கு அழைத்து வந்து என்னை குளிப்பாட்டியது உண்டு.

இந்த நிலையில் நான் எதற்கு உபயோகம் ஆவேன் என்று என்னையே கேட்ட போது நான் படித்த படிப்புதான் என் கண்முன் வந்தது. என்னை இந்த நிலையிலும் நேசித்து பாசம் காட்டிய ஆய்க்குடி கிராம குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை வேளையில் பாடம் நடத்தினேன், அதையே விரிவு படுத்தி ஒரு கீற்றுக்கொட்டகையில் ஒரே ஒரு டீச்சருடன் கடந்த 1981ம் வருடம் துவங்கப்பட்டதுதான் அமர்சேவா சங்கம். எனக்குள் நம்பிக்கை விதை விதைத்த மருத்துவர் அமர் பெயரையே சேவா நிறுவனத்திற்கு வைத்தேன்.

அதன்பிறகு மாற்றுத் திறனாளி என்ற முறையில் மாற்றுத் திறனாளிகளின் தேவை என்ன என்பதை அறிந்து அதை களைவதற்காக கடுமையாக பாடுபட்டேன்.ஒரு ரப்பர் பந்து போல என்னை சுருட்டி எடுத்துக்கொண்டு ரயிலிலும், பஸ்சிலும், காரிலும் கொண்டு செல்வார்கள் நானும் சலிக்காமல் பல ஊர்களுக்ககு பயணம் மேற்கொண்டு சங்க வளர்ச்சிக்கான செயல்களில் இறங்கினேன்.

நல்ல பெற்றோர்கள், நல்ல ஊடக நண்பர்கள், நல்ல மக்கள், நல்ல நன்கொடையாளர்கள் என்று என்னைச் சுற்றி நல்ல விஷயங்களாகவே இருக்க அமர்சேவா சங்கத்தில் பல நல்ல காரியங்கள் மள, மளவென நடந்தேறியது.
இன்று 32 ஏக்கரில் அமர்சேவா சங்கம் விரிந்து பரந்துள்ளது.

உள்ளே ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு தொழில்கல்வி கற்றுத் தரப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் பொம்மைகள், நோட்டு புத்தகங்கள், யூனிபார்ம்கள் தைத்தும், தயாரித்தும் கொடுத்து சம்பாதித்து வருகின்றனர்.

சிறு குழந்தைகளுக்கு உடல் ஊனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனே சரிப்படுத்தும் மையம் உள்ளது. ஆசியாவிலேயே முதுகுதண்டு வடம் சிகிச்சை செய்யும் நான்காவது மையம் இங்குதான் உள்ளது.

எனது தொண்டிற்கு தோள் கொடுக்கும் விதத்தில் என்னைப்போலவே கழுத்திற்கு கீழ் செயல்பாடு இல்லாத எஸ்.சங்கரராமன் செயலாளராக வந்தபின் சங்கத்தின் பணிகள் இன்னும் வேகம் பிடித்துள்ளது.

கள்ளி முளைத்து கிடந்த காட்டில் இன்று கல்வி முளைத்து காணப்படுகிறது என்று ஊடகங்களால் ஊட்டி வளர்க்க்கப்பட்டுவரும் அமர்சேவா சங்கம் இன்னும் போகவேண்டிய தூரமும் எட்ட வேண்டிய எல்லைகளும் நிறையவே இருக்கின்றது.

முதுகுதண்டு வட பாதிப்பு மையத்தை விரிவு படுத்த வேண்டும், சிறு வயதிலேயே குழந்தைகளின் மன.உடல் ஊனம் கண்டறியப்பட்டு அவை களையப்பட தேவையான கருவிகள் நிறைய வாங்கப்பட வேண்டும். தாய், தந்தையற்ற உடல் ஊனமுற்றவர்களின் வாழ்நாள் முழுவதற்குமான காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அன்பும், சமுதாயத்தின் அரவணைப்பும், அரசாங்கத்தின் வேலை வாய்ப்பும்தான். வெளிநாடுகளில் ஒரு சதவீத வேலைவாய்ப்பு என்பதை கட்டாயமாக அமல்படுத்துகின்றனர் அதே போல இங்கேயும் அமல்படுத்தினால் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமே வேலை கிடைத்து விடும். அதற்கான முயற்சிகளில் நானும் செயலாளர் சங்கரராமனும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். உங்களைப் போன்ற நல்லோர் ஆதரவால் எங்கள் கனவுகள் அனைத்தும் மெய்ப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறி முடித்தார் ராமகிருஷ்ணன்.

நாட்டில் எத்தனையோ தொண்டு நிறுவனங்களை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். மன, உடல் வளர்ச்சி குறைந்த ஆதரவற்ற குழந்தைகளை காண்பித்து தொண்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பித்து ஐந்து வருடங்களில் சம்பந்தபட்ட குழந்தைகள் வளர்ச்சியை இரண்டாது இடத்திற்கு தள்ளிவிட்டு தங்களது வளர்ச்சியில் மட்டும் அக்கறை காண்பித்து ஹைடெக்காக காணப்படுவார்கள்.

ஆனால் அமர் சேவா சங்கம் அப்படி இல்லாமல் ஆரம்பத்தில் இருந்த அதே எளிமை கோலத்துடன் காணப்படுகிறது. ஒவ்வொரு பைசாவையும் பார்த்து பார்த்து யோசித்து யோசித்து செலவு செய்கின்றனர். கிட்டத்தட்ட 32 வருடமாகியும் தலைவர் ராமகிருஷ்ணன் ஆடம்பரத்தின் அரிச்சுவடி கூட தன் மீது படரவிடாமல் எளிமை திருக்கோலத்தில் காணப்படுகிறார். என்னால் ரொம்ப நேரம் உட்கார்ந்து பேச முடியாது கொஞ்சம் படுத்துண்டு பேசலாமா? என பணிவுடன் அனுமதி கேட்கிறார்.

 குற்றாலத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்தான் அமர் சேவா சங்கம் இருக்கிறது அங்கே வர்ரவங்க ஒரு எட்டு இங்கேயும் வந்துட்டு போங்க எங்க குழந்தைகள் ரொம்ப சந்தோஷப்படும்.நீங்களும் இங்கே அடிக்கடி வந்துட்ட போங்க நாங்க சந்தோஷப்படுவோம் என்கிறார்.

அமர் சேவா சங்க விருந்தினர் விடுதியில் இரண்டு நாள் தங்கியிருந்து அவர்களுடன் வாழ்ந்து பார்த்த போது வாழ்க்கையின் பல அர்த்தங்களை உணர முடிந்தது. அதை அங்குள்ள குழந்தைகளே உணர்த்தினர். அவர்களிடம் கவலை இல்லை, கண்ணீர் இல்லை, பசி இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை மாறாக நம்மால் முடியும் என்ற மலையளவு நம்பிக்கை இருக்கிறது குறையாத அன்பு இருக்கிறது குன்றாத பாசம் இருக்கிறது இந்த நாட்டிற்கும் பிறந்த வீட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. இத்தனைக்கும் காரணம் கடவுள் போல அவர்களுக்காக ராமகிருஷ்ணன் இருப்பதினால்.

அமர்சேவா சங்கத்தைவிட்டு திரும்பி வரும் போது யாரோ எப்போதோ எழுதியதுதான் நினைவிற்கு வந்தது அது,
ஞானங்கள் பல ஊனமாகி நாட்டில் இருக்கும் நிலையில் பல ஊனங்கள் இங்கே ஞானங்களாக இருக்கின்றனர் என்பதுதான்.

அமர்சேவா சங்க தலைவர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேசுவற்கான எண்: 9994385170.

லாரா...லாரா...லாரா...





- எல்.முருகராஜ்

கழுத்திற்கு கீழுள்ள அவயங்கள் செயல்படாத இருபெரும் சக்திகளான ராமகிருஷ்ணன், சங்கரராமன் ஆகியோரை முறையே தலைவராகவும், செயலாளராகவும் கொண்டு செயல்பட்டுவரும் உடல் ஊனமுற்றோரை முன்னேற்றும் மையம்.

இந்த மையத்தில் ஆட்டிசம் என்ற மனவளர்ச்சி பாதித்த குழந்தைகள் துவங்கி உடல் ஊனமுற்றவர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த மையத்தில் முதுகுதண்டு பாதிப்படைந்தவர்களுக்காக சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. மரம் ஏறும் போதும், கட்டட வேலை செய்யும் போதும் தவறி விழுந்த தொழிலாளர்கள்தான் பெரும்பாலும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.

படுத்த படுக்கையாக கிடக்க வேண்டும், சிறுநீர் கழிப்பது மலம் வெளியேற்றுவது கூட இவர்களால் முடியாது. அந்த உணர்வே இல்லாமல் இருப்பார்கள். யாருடைய உதவியோடுதான் இவைகள் நடைபெற வேண்டும். கொசு கடித்தால் கூட பார்த்துக் கொண்டு இருக்க முடியுமே தவிர அடிக்க முடியாது, யாரையாவது கூப்பிட்டுதான் அடிக்கவேண்டும் அல்லது விரட்ட வேண்டும். 

இவர்களுக்கு நீண்ட கால சிகிச்சை தேவை, கொஞ்சம் சோர்ந்து போனாலும் படுக்கை புண் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு போய்விட்டுவிடும். இதனால் பெரும்பாலும் இறந்துவிடுவதே மேல் என்று எண்ணுவார்கள். அந்த அளவிற்கு நோயின் தன்மை இருக்கும்.

இவர்களுக்கு சிகிச்சை வழங்க தேவையான சிகிச்சை மையங்களும் மிகக்குறைவாகவே உள்ளன. தவிர மிகவும் செலவும் ஆகும். இந்த நிலையில் முதுகு தண்டு வட சிகிச்சையை இலவசமாகவும், சிறப்பாகவும் தருவது அமர் சேவா சங்கம் மட்டுமே.

இதைக் கேள்விப்பட்டு கடந்த வாரம் நேரில் போய் பார்த்த போது அந்த சிகிச்சை மையத்தில் இளைஞர்கள் சிலர் வேரறுந்த மரம் போல பார்க்கவே மிகப்பரிதாபமாக கட்டிலில் விழுந்து கிடந்தனர்.

கண்களையும், கழுத்தையும் அசைத்து அசைத்து தங்களுக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கவேண்டிய நேரம், கால்களை பிடித்து மெலிதாக மடக்கி நீட்டவேண்டும், இதே போல விரல்கள் பாதங்கள், கைகள் என்று பொறுமையாக செய்ய வேண்டும்.

யார் இதைச் செய்யப்போகிறார்கள் என்று எண்ணியிருந்த போதுதான் தென்றல் போல அந்த அந்நியநாட்டு பெண் நுழைந்தார்.

பெயர் லாரா.

லண்டனைச் சேர்ந்தவர் அங்குள்ள பிரபலமான மருத்துவமனையில் சீனியர் பிசியோதெரபிஸ்டாக உள்ளார்.
இணையதளத்தில் அமர் சேவா சங்கம் பற்றி படித்து கேள்விப்பட்டு இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தன் சொந்த செலவில் அடிக்கடி வந்து செல்பவர்.

இளம் வயது, கை, கழுத்து, விரல் என்று எந்த இடத்திலும் எந்தவிதமான அணிகலன்களும் இல்லாத எளிமையான தோற்றம், மற்றும் இனிமையான முகத்துடன் காணப்பட்ட லாரா வளாகத்தில் உள்ள சாதாரண விருந்தினர் விடுதியில் தங்கிக் கொண்டு, பொது சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு இங்குள்ள நோயாளிகளுக்கு இலவசமாக தொண்டுள்ளத்துடன் சேவை செய்து வருகிறார்.

நீண்ட நாள் தங்கியிருப்பார் போலும் நோயாளிகள் புரிந்து கொள்ளும் வகையில் தட்டுத்தடுமாறி தனக்கு தெரிந்த தமிழிலேயே பேசுகிறார்.

அவர் பேசும் மொழி சில இடங்களில் புரியாவிட்டாலும் அவரது கண்களிலும் முகத்திலும் கொப்புளிக்கும் அன்பு மொழி அனைவருக்கும் புரிகிறது. எந்தவித கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சொந்த அண்ணன், தம்பியின் காலை பிடிப்பது போல கால், கைகளை பிடித்து பிடித்து பயிற்சி கொடுப்பதை பார்க்கும் போது நெஞ்சம் நிறையவே நெகிழ்ந்தது.

சிரித்த முகத்துடன் ஒவ்வொரு நோயாளிகளிடமும் அவரவர் நோய்த்தன்மைக்கு ஏற்ப சிகிச்சை கொடுத்துவிட்டு கிளம்பும் போது இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிடுகிறது. இது போல அதிகாலை மற்றும் மாலை தேவைப்பட்டால் மதியமும் இவர்தரும் பயிற்சி பெரிதும் பயன்படுவதாக இங்குள்ளவர்கள் நன்றியோடு குறிப்பிட்டனர்.

ஆனால் அந்த நன்றியையோ வேறு எதையுமே எதிர்பார்க்காமல் தான் சார்ந்த மனித சமூகத்திற்கு தனக்கு தெரிந்ததை செய்யும் கடமையாகவே செய்யும் இவர் தனது பெயரை சொல்லக் கூட தயங்கினார்.

இவர்களைப் போல நானும் படுக்கையில் விழுந்து கிடக்க பெரிதாக எதுவும் செய்யவேண்டாம், கட்டிலில் இருந்து புரண்டு படுத்தாலே போதும் ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் நல்லபடியாக இருக்கிறேன். அதற்கு நன்றியாக ஆறு மாதகாலம் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறேன் பின்னர் அங்கு சம்பாதித்த பணத்தை செலவழித்துக் கொண்டு முறையான அனுமதி பெற்று இங்கு வந்து என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன், 

இதை தொண்டு என்றெல்லாம் சொல்லி என்னை பெரிய ஆளாக்கிவிடாதீர்கள் இது எனது கடமை.
யாராவது ஸ்பான்சர் செசய்தால் மட்டுமே பக்கத்து ஊர் மருத்துவ முகாமிற்கு செல்லும் "தொண்டுள்ளம்' கொண்டவர்களை பார்த்த நமக்கு இப்படி நாடுவிட்டு நாடுவந்து தொண்டு செய்யும் லாரா ஒரு ஆச்சர்யமாகவேபட்டார்.

 உங்களுக்கு...