என்னைப் பற்றி!


கொஞ்சம் புகைப்படம் எடுக்கவும்,கொஞ்சம் எழுதவும் தெரிந்த ஒரு பத்திரிகையாளன் .

என் தட்டில் உள்ள உணவும், உடலில் உள்ள ஆடைகளும், கவுரமும் தினமலர் தந்தது,போற்றுதலுக்குரிய நிறுவனர் டிவிஆரால் வந்தது.

எனக்கு ஆசான்களாகவும்,அண்ணன்களாகவும்,அரண்களாகவும் இருப்பவர்கள் தினமலர் ரமேஷ் சார்,சுரேஷ் சார்,மகேஷ் சார் மற்றும் வெங்கடேஷ் சார் ஆகியோர்தான்.

எளியோரை நேசிப்பதும்,புத்தகங்கள் வாசிப்பதும்,இயற்கையை சுவாசிப்பதும்,எளிமையாய் இருப்பதும்,அமைதியாய் வாழ்வதும் எனக்கு  பிடித்த விஷயங்கள்.தேசத்தின் மீதும் தமிழின் மீதும் அளவுகடந்த பற்றும் பாசமும் உண்டு.பெண்மையை போற்றுகிறேன்,உண்மையை விரும்புகிறேன்.பழமையையும்,பண்பாடுகளையும் இதயபூர்வமாக நேசிப்பவன் ,அதே நேரம் புதுமைகளை இருகரம் நீட்டி வரவேற்பவன்.

சின்ன நகைச்சுவையாக இருந்தாலும் விழுந்து,விழுந்து சிரிப்பேன்,யாருடைய வேதனையானாலும் கண்ணிர்விட்டு அழுவேன்.

நிறைய இரக்கப்படுபவன் அதனால் தெரிந்தே  ஏமாறக்கூடியவன்.

வரக்கூடிய தலைமுறைக்கு நல்ல காற்றும்,தண்ணீரும்,நல்ல உணவும் தடையின்றி கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கம் உள்ளவன்.எந்த சூழ்நிலையிலும் நிலை மாறாது நல்லவனாக வாழ்வதே சிறந்த ஆன்மீகம் என்ற நிலைப்பாடு உடையவன்.

அலங்கார் ஜல்லிக்கட்டு துவங்கி,ஸ்ரீ ரங்கம் ராஜகோபுரம் முதல் கும்பாபிஷேகம்,சுனாமியின் கோரவிளையாட்டு,திருவள்ளூர் சிலை நிர்மாணம்,ஜிஎஸ்எல்வி ராக்கெட் பயணம்,மேகலை நிலச்சரிவு,ராமேசுவரம் பாலம் திறப்பு,அரியலுõர் ரயில் விபத்து,சந்தன கடத்தல் வீரப்பன் வதம்,கும்பகோணம் பள்ளிக்குழந்தைகள் மரணம்,மதுரை தபால் நிலைய முதல் குண்டு வெடிப்பு,பட்டினம்காத்தான் பகுதியில் புலிகளின் முதல் துப்பாக்கி சூடு,ஏர்வாடியின் பயங்கர தீவிபத்து, என்று தமிழக வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறக்கூடிய பல முக்கிய சம்பவங்களில் எனது பதிவும் உண்டு.

ஒன்றுக்கு இரண்டு முறை மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தை  படம் எடுத்தவன் அங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் எனது தொகுப்புகளே. மீனாட்சி கோவிலின் பதினான்கு கோபுரங்களும் தெரியும்படி ஹெலிகாப்டரில் பறந்தபடி கறுப்பு,வெள்ளையில் பிரபல புகைப்படக்கலைஞர் கிறிஸ்டோபர் படம் எடுத்து இருந்தார், அதன் பிறகு அதே போல பதினான்கு கோபுரங்களும் தெரியும்படி ஹெலிகாப்டரில் பறந்து சென்று வண்ணத்தில் படம் எடுத்தவன் இன்றளவிலும் நான் மட்டுமே.

ரோலி பிளக்ஸ் கேமிராவில் ஆரம்பித்த எனது புகைப்பட பயணம் இப்போது நிக்கான் டி3 டிஜிட்டல் கேமிராவில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. டிஜிட்டல் கேமிராவில் எடுத்து அதனை லேப்டாப் மூலமாக உடனுக்குடன் பிரசுரத்துக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் ஆரம்பித்துவைத்தவன்.இப்போது இன்னும் பல படிகள் முன்னேறி ஒரு மணிக்கொரு முறை தினமலர்.காம் இணையதளத்தில் பல பதிவுகளை புதுப்பிக்கும் பணியில் இருக்கிறேன்.

தினமலர்,வாரமலர்,ஆன்மீகமலர்களில் மட்டுமல்லாது தினமலர்.காம் இணையதளத்திலும் எனது படைப்புகள் நிஜக்கதைஎன்ற தலைப்பிலும்,கேமிரா எழுதும் கவிதைகள் பொக்கிஷம்’   பகுதியிலும், நகைச்சுவையான விஷயங்கள்  போட்டூன்’  பகுதியிலும் தொடர்ந்து இடம் பெற்றுவருகிறது.

உங்கள் அன்பும் ஆசியும் எனக்கு உற்சாகத்தையும்  நிச்சயம் கொடுக்கும்.

நன்றி!

2 comments:

  1. i pray to god give more blessing in your life .continue your serve in this world


    santhakumar.jr

    7845011007

    ReplyDelete
  2. Arumaiyana Pathivu sir mikka nandri

    ReplyDelete